'நிமிர்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

'பொதுவாக எம்மனசு தங்கம்' வெற்றியைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து இவரது அடுத்தப் படத்துக்கு 'நிமிர்' என்று பெயர் வைத்துள்ளனர். 

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். மோகன்லாலும், ப்ரியதர்ஷனும் மலையாள திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பதனால், இப்படத்தின் தலைப்பை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிட படக் குழு தீர்மானித்துள்ளது 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!