Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது’: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் ஆண்டுக் கணக்கு வெளியிடப்பட்டது. மேலும், விழாவில் பழம்பெரும் நடிகைகளான காஞ்சனா, ஷீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கூறுகையில், “தேர்தலின்போது நாங்கள் வாக்குறுதியிலும் விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டுக் கணக்கு வெளியீடு;மூலதன கணக்கு-ரூ.1.06 கோடி, ரொக்க கையிருப்பு-ரூ.1.09 லட்சம், வங்கியிருப்பு-ரூ.18.31 லட்சம். கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது. 40% வரி செலுத்திவிட்டு தொழில் நடத்த முடியாது. வரியை ரத்துசெய்வது தொடர்பாக அரசுத் தரப்பில் இருந்து கருணாஸ் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்ததாகப் பொருளாளர் கார்த்தி பேசுகையில், “வருகிற ஜனவரி மாதம் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலிடம் ஒப்புதல் பெற்றுவிட்டோம். விரைவில் அறக்காவல் குழுவிடமும் ஒப்புதல் பெறப்படும்” என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement