’பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப்போவதில்லை’: அமிதாப் பச்சன் அறிவிப்பு | 'won't celebrate my birthday and diwali this year', says Amitabh Bachchan

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (08/10/2017)

கடைசி தொடர்பு:08:02 (09/10/2017)

’பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப்போவதில்லை’: அமிதாப் பச்சன் அறிவிப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் அமிதாப் பச்சன் இந்த ஆண்டு தன் பிறந்தநாள் மற்றும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 30 மில்லியனாக (மூன்று கோடியாக) உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நிலவரப்படி அமிதாப் பச்சனை ட்விட்டரில் பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக இருந்த நிலையில், இந்த ஒரு ஆண்டு கால வேளையில் அவரை சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

’ரசிகர்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி’ என அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில், “இந்தாண்டு எனது பிறந்தநாள் மற்றும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடப்போவதில்லை’ என ட்விட்டரில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


[X] Close

[X] Close