Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தந்தையுடன் முதல்முறையாக இணையும் கெளதம் கார்த்திக்

பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், நடிகர் கார்த்திக். அதன்பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். இவரது பாடி லாங்குவேஜூக்காவே தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90-களில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

கெளதம் கார்த்திக்

நடிகை குஷ்புவின் ஃபேவரைட் ஹீரோ லிஸ்ட்டில் இன்று வரை முதல் இடத்தில் இருப்பவர், நடிகர் கார்த்திக்தான். தற்போது இவரது மகன் கெளதம் கார்த்திக் நடிகனாகக் களத்தில் இறங்கி விட்டதால் செலக்ட்டிவான கேரக்டரில் மட்டுமே தலைக் காட்டி வருகிறார் நடிகர் கார்த்திக். 

இதற்கிடையில், கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்ற இடத்தை அடைவதற்குப் போராடிவரும் வேளையில், இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என்ற பேச்சு ரொம்ப நாளாகவே அடிபட்டது. தற்போது இவர்கள் இருவரும் இணையும் படத்தின் பெயர் மற்றும் இயக்குநர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷாலை வைத்து 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குநர் ’திரு’ தான் முதல் முறையாக  அப்பா-மகன் இணையும் படத்தை இயக்கப்போகிறார். 'மிஸ்டர் சந்திரமெளலி' எனப் பெயரிட்டிருக்கும் இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வரலட்சுமி, ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். 'மெளன ராகம்' படத்தில் கார்த்திக் பயன்படுத்திய மிஸ்டர் சந்திரமெளலி என்ற பெயர், ஆல்ரெடி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் படத்தின் டைட்டில், ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement