வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (14/10/2017)

கடைசி தொடர்பு:15:20 (14/10/2017)

'கட்டளையிடுவதுபோல பேசுவதா? விஷாலை விளாசும் அபிராமி ராமநாதன்

திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல நடிகர் விஷால் பேசுகிறார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். 


மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரியைத்தொடர்ந்து திரையரங்குகளில் கட்டண விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திரையரங்குகளுக்கு விஷால் சில பரிந்துரைகளை வைத்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், 'டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும். சமோசா போன்ற பொருள்களுக்கு எம்.ஆர்.பி விலை கிடையாது. கேளிக்கை வரி குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்குப் பிறகே, டிக்கெட்டின் விலை குறைக்கப்படும். தியேட்டர் நெறிமுறைகள் குறித்த விஷாலின் அறிவிப்புகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. திரையரங்க உரிமையாளருக்கு கட்டளையிடுவது போல விஷால் பேசுகிறார். யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது' என்று தெரிவித்தார்.