வெளியானது 'மேயாத மான்' திரைப்பட ட்ரெய்லர்! | Meyaadha Maan Official Trailer

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (14/10/2017)

கடைசி தொடர்பு:19:46 (14/10/2017)

வெளியானது 'மேயாத மான்' திரைப்பட ட்ரெய்லர்!

மேயாத மான்

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டோன் பென்ச்' சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'.  ரத்தின குமார் இயக்கிய 'மது' என்கிற குறும்படத்தைத்தான் தற்போது அவர் 'மேயாத மான்' என்கிற திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வைபவ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 'மேயாத மான்' வரும் தீபாவளி முதல் திரைக்கு வருகிறது. 

 


[X] Close

[X] Close