'மெர்சல்' படத்துக்காக இன்று அவசர ஆலோசனை!?

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழை இன்னும் படக்குழுவினர் பெறவில்லை. இதனால், திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து முடிவெடுக்க விலங்குகள் நல வாரியம் இன்று அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
 

மெர்சல்

தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து 'மெர்சல்' படத்துக்குப் பல தடைகள் வந்த வண்ணம் இருகிறது. 'மெர்சல்' தலைப்புக்கு வந்தது முதல் சிக்கல். நீதிமன்றம் வரை சென்று தலைப்புக்கு போடப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டது. முதல் சிக்கல் தீர்ந்தபின்னர், திரையரங்கு டிக்கெட் பிரச்னை தொடங்கியது. கேளிக்கை வரியைக் குறைக்கும் வரை புதிய படங்கள் வெளியாகாது என அறிவிப்பு வெளியானது. இதனால் மீண்டும் 'மெர்சல்' படம் வெளியாகுமா என்ற சந்தேகம் வந்தது. எனினும் தடைகளைத் தாண்டி படம் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்து வந்தார். இதையடுத்து, கேளிக்கை வரி பிரச்னையும் ஓய்ந்தது. இந்நிலையில், படத்துக்கு புதிய சிக்கலாக விலங்குகள் நல வாரியம் மூலம் தொடங்கியது. படத்தில் விஜய் மேஜிக்மேன் ஆக வரும் காட்சியில் பயன்படுத்தும் புறா கிராபிக்ஸ் என்னும் ஆதரங்களை படக்குழு சமர்பிக்கவில்லை என்றும் அதனால் விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடை இல்லாச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சிக்கலை சரிசெய்ய விஜய் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் 'மெர்சல்' பிரச்னை குறித்து ஆலோசிக்க விலங்குகள் நல வாரியம் கூட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!