‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் இசையமைப்பாளர் யார் என்பது தீபாவளி அன்று தெரியும்! | Enai Nooki Paayum Thotta composer to be revealed on the Deepavali day

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (17/10/2017)

கடைசி தொடர்பு:08:00 (17/10/2017)

‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் இசையமைப்பாளர் யார் என்பது தீபாவளி அன்று தெரியும்!

எனை நோக்கி பாயும் தோட்டா

‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்துக்குப் பின் கெளதம் மேனன் ஆரம்பித்த படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பை முடிக்கும் முன்னரே கௌதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை விக்ரமை வைத்துத் தொடங்கிவிட்டார். இதற்கிடையில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை விளம்பரப்படுத்த ஒரு புது யுக்தியைக் கையாண்டார் கௌதம். ‘மறுவார்த்தை பேசாதே’ என்று ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு இசையமைப்பாளர் யாரென்று சொல்லாமல் மிஸ்டர்.எக்ஸ் என்று ரகசியமாக வைத்திருந்தார். படத்தின் மற்றொரு பாடலான ‘நான் பிழைப்பேனோ’வும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இருந்தும் மிஸ்டர்.எக்ஸ் யாரெனச் சொல்லாமல் இருக்கிறார் கௌதம்.

இந்நிலையில், தனது சமூக பக்கங்களில் இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், மிஸ்டர்.எக்ஸ் யாரென்பது தீபாவளி அன்று தெரியும் என்று கூறியுள்ளார். கூடுதல் செய்திகளாக ஹிட்டடித்த ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலின் மற்றொரு வெர்ஷன் தீபாவளி அன்றே வெளிவரும் என்றும், படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிஸ்டர்.எக்ஸ் யாரென்ற விவாதத்தில் தர்புகா சிவாவின் பெயர் உட்பட ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பெயர் வரை உச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close