’பிசிறில்லாம செஞ்சு முடிச்சுடலாம்’ - விக்ரமின் ஸ்கெட்ச் டீசர்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தின் டீசர் வெளியானது. 

 

இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

ஒவ்வொரு படத்துக்காகவும் அதிகம் மெனக்கெடும் விக்ரம், ஒரே நேரத்தில் ஒரு படத்துக்கும் மேல் நடிப்பதில்லை. ஆனால், அந்த ஸ்டைலை மாற்றி ஒரே சமயத்தில் விஜய் சந்தரின் ஸ்கெட்ச் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்தது. சமீபத்தில் வெளியான ஸ்கெட்ச் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மூலம் படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கும் நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஸ்கெட்ச் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்துக்கான வேலைகளில் விக்ரம் இப்போ பிஸி.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!