பரத் நடிப்பில் ’சிம்பா’ படத்தின் டீசர் வெளியானது | Teaser of movie simba released

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (20/10/2017)

கடைசி தொடர்பு:07:54 (21/10/2017)

பரத் நடிப்பில் ’சிம்பா’ படத்தின் டீசர் வெளியானது

நடிகர் பரத், ப்ரேம்ஜி அமரன், ரமணா, பானுஸ்ரீ மெஹ்ரா, பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிம்பா. பரத் கதாநாயகனாக வெற்றி பெற தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில் இந்தப் படம் அவருக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பரத், போதைக்கு அடிமையான இளைஞராக நடிக்கிறார். அவரது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் குறித்த படம்தான் சிம்பா. இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசர் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பரத்துக்கு இந்தப் படம் நிச்சயம் கைகொடுக்கும் என டீசர் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.