மெர்சல் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் - முடிவுக்கு வருகிறதா மெர்சல் சர்ச்சை?

மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் வெளியான பின்னர் படம் குறித்த சர்ச்சைகள் இன்னமும் அதிகரித்தன. படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை விடுத்துவந்தனர். 


இந்நிலையில் மெர்சல் படத்தைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “மெர்சல் படம் வெளியாகி பலை சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. இது எங்களை மிகுந்த மன வேதனையடையச் செய்தது. இது அரசுக்கு எதிரான கருத்து சொல்லும் படம் அல்ல. சாமானிய மனிதருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவரின் கனவுதான் இந்த படத்தின் கரு.

எங்கள் தயாரிப்புகளால் யாரும் மன வருத்தமடைந்திருந்தால் அதை என்னுடைய சொந்த வருத்தமாகக் கருதுகிறேன். சர்ச்சைகள் குறித்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தோம். எங்கள் விளக்கத்தை அவர்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டனர். பாஜக கட்சி உறுப்பினர்களின் பார்வையில் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நியாயமாகவே உள்ளன. எதைப்பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்”  என விளக்கமளிக்கபட்டுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!