பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்..!

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி, உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. 


கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஐ.வி.சசி, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். கமல் நடித்துள்ள 'குரு', 'அலாவுதீனும் அற்புதவிளக்கும்' ஆகிய படங்களை ஐ.வி.சசி இயக்கியிருந்தார். இன்று காலையில், அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். தற்போது, அவர் உடல் சூர்யா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!