``சக்சஸ்ஃபுல் தொகுப்பாளினியா வலம் வருவேன்..!’’ - பிக் பாஸ் ஜூலி | Bigg Boss Julie becomes television Anchor

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (30/10/2017)

கடைசி தொடர்பு:17:29 (30/10/2017)

``சக்சஸ்ஃபுல் தொகுப்பாளினியா வலம் வருவேன்..!’’ - பிக் பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலமாகத் தமிழக மக்களிடம் அறிமுகமான ஜூலியானாவை தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டி.வி. 

ஜூலி

இதில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஜூலி மட்டுமே பொது ஜனங்களின் ஒருவராக அறிமுகமானார். நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது முதலே இவரது நடவடிக்கைகள், செயல்கள் மூலமாக ஜூலியைச் சிலர் வெறுக்க ஆரம்பித்தனர். ஆனால், இவை எது பற்றியும் கவலை கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி ஜூலி சென்று கொண்டேதான் இருந்தார். 

நர்ஸாக இருந்த ஜூலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்க ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். தற்போது இவரது ஆசை கலைஞர் டி.வி-யின் வாயிலாக நிறைவேறியிருக்கிறது. கலைஞர் டி.வி-யில் ஒளிப்பரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் ஆறாவது சீஸனை கோகுலுடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கப்போகிறார். 

ஜூலி

இது குறித்து ஜூலியிடம் கேட்டபோது, ``சமீபத்தில் எனக்கு கலா மாஸ்டர் போன் பண்ணி, `என்னோட ஷோவுக்கு ஆங்கராக இருக்க உனக்கு விருப்பமா’னு கேட்டார். நானும் ஓகேனு சொன்னேன். நான் ஓகே சொன்ன ரெண்டாவது நாள், கலா மாஸ்டர் கால் பண்ணி `நீதான் என் ஷோவோட ஆங்கர்’னு சொன்னார். என் நீண்ட நாள் ஆசை கலா மாஸ்டர் மூலமா நிறைவேறியிருக்கு. அவருக்குதான் நன்றி சொல்லணும். ஒரு சக்சஸ்ஃபுல் தொகுப்பாளியாக நான் வலம் வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க