கார்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழா மழையால் ரத்து..! | Karthi's music launch ceremony cancelled by rain

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (01/11/2017)

கடைசி தொடர்பு:14:36 (01/11/2017)

கார்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழா மழையால் ரத்து..!

'காற்று வெளியிடை ' படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தியின் நடிப்பில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம், 'தீரன் அதிகாரம் ஒன்று'. 'சதுரங்க வேட்டை' வினோத் எடுக்கும் இந்தப் படத்தில், கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங்  நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

தீரன் அதிகாரம் ஒன்று

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை சென்னையில் நடைபெறுவதாகயிருந்தது. ஆனால், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், நாளை நடைபெற இருந்த இசை வெளியீட்டு விழாவைத் தயாரிப்பு நிறுவனம் ரத்துசெய்துள்ளது. 

ஆனால், 'திட்டமிட்டபடி நாளை படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்படும்' என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கிய நிலையில், படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க