பணம் மனிதனை உருவாக்காது..! நயன்தாரா உரக்கச் சொல்லும் 'அறம்'

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அறம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

விவசாயம், தண்ணீர் பஞ்சம் மற்றும் பல அடிப்படை பிரச்னைகளால் சிக்குண்டிருக்கும் ஒரு கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் நயன்தாரா எவ்வாறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற கதைக்களத்தைக் கொண்டதுதான் 'அறம்' திரைப்படம். இந்தப் படத்தை கோபி நயினார் என்பவர் இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் ஆழமான அரசியலையும் தண்ணீர் அரசியலையும் எடுத்துவைக்கின்றன. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!