'இந்தியன் 2' படத்துக்கு அனிருத் இசை..!

'2.0' படத்துக்கான பணிகள் முழுவதும் முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீஸுக்காகத் தயாராகக் காத்து இருக்கிறது. அடுத்து 'இந்தியன் -2' படத்துக்கான கதை, திரைக்கதை விவாத வேலைகளில் பரபரப்பாக இறங்கி இருக்கிறது, ஷங்கர் டீம். விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 வதுநாளில் கமலும் ஷங்கரும் இணைந்து 'இந்தியன் -2' பட அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டனர். இந்தப் படத்தை முதலில் தில்ராஜ் தயாரிப்பதாக பிக்பாஸ் மேடையிலேயே அறிவிக்கப்பட்டது. அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. ரஜினியின் '2.0' படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கப்போகிறது என்று சொன்னார்கள்.

ஆனால், 'இந்தியன்' முதல் பாகத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்த ஏ.எம்.ரத்னமே 'இந்தியன் -2' படத்தையும் தயாரிப்பது உறுதியாகிவிட்டது. ஷங்கர் இயக்கிய முதல்படம் 'ஜென்டில்மேன்' முதற்கொண்டு இப்போது எடுத்து முடித்திருக்கும் '2.0' வரை அவரது பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இப்போது ஷங்கரின் 'இந்தியன் -2' படத்துக்கு அனிருத் இசையமைக்கப்போகிறார். முதன்முதலாக ஷங்கர் - அனிருத் கூட்டணி கமல் படத்துக்காகக் கரம் கோத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!