வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (06/11/2017)

கடைசி தொடர்பு:15:03 (06/11/2017)

பிக் பாஸ் ஆரவ்வின் புதிய படம்!

'சைத்தான்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், பிக் பாஸ் ஆரவ். இந்தப்  படத்தின்மூலம் ஆரவ் அறிமுகமாகியிருந்தாலும், இவரை பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு, தமிழ் சினிமாவில் தற்போது நிறையப் படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. 

ஆரவ்


ஆரவ், புதிதாக கமிட்டாகியிருக்கும் படங்கள் பற்றித் தெரிந்துகொள்ள அவரிடமே பேசினோம். ''ரொம்பஹேப்பியா இருக்கு. 'சைத்தான்' படத்துக்குப் பிறகு எனக்கு ஹீரோ வாய்ப்புகளைவிட அமெரிக்க மாப்பிள்ளை மாதிரியான ரோல்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால், நல்ல ரோலாக நடிக்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு, நிறைய ஹீரோ வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில், 'சிலம்பாட்டம்' படத்தின் இயக்குநர் சரவணன் எடுக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறேன்.

படத்தின் பெயர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பக்கா எண்டர்டெயின்மென்ட் படமாக   இந்தப் படம் இருக்கும். சமீபத்தில்தான் படத்தின் இயக்குநர் சரவணன் என்னைச் சந்தித்து, இந்தப் படத்தின் கதையைக் கூறினார். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், உடனே ஓகே சொல்லிவிட்டேன். இன்னும் இரண்டு வாரத்தில் படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும். 'வாகா' படத்தைத் தயாரித்த ஜி.என்.ஆர்.குமாரவேலன் நிறுவனம்தான் என்னுடைய புதிய படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். விரைவில் மற்ற படங்கள் பற்றிய அறிவிப்பும் வெளிவரும்'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார், பிக் பாஸ் ஆரவ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க