'புது வரலாறு' பாடல்... புரட்சியாகவும் எழுச்சியாகவும் இருக்கும்! 'அறம்' பாடலாசிரியர் உமாதேவி

உமாதேவி

டிகை நயன்தாரா நடித்துள்ள `அறம்' படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகவிருக்கிறது. கமர்ஷியல் பட வரிசையில் இல்லாமல் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாரா அதிக கவனம் செலுத்திவருகிறார். அந்த வரிசையில் 'அறம்' திரைப்படத்தில் நேர்மையான கலெக்டராக நடித்திருக்கிறார். இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. 

உமாதேவி

இந்நிலையில் இப்படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது. இப்படத்தில்தான் எழுதியிருக்கும் இரண்டு பாடல்கள் குறித்து வீடியோவில் பாடலாசிரியர் உமாதேவி பேசியிருக்கிறார். அதில், 'தோரணம் ஆயிரம்... பார்வையில் தோன்றிடும். காட்சியில் என்ன இருக்கு' பாடல் கடைநிலையில் இருக்கும் மக்களுக்கிடையிலான காதலைப் பிரதிபலிப்பதுபோல எழுதியிருக்கேன். மேலும், 'புது வரலாறு; புறநாநூறு; இனம் மறக்காதே, திமிராய் வா வா!' என ஓர் இனத்தின் எழுச்சியாய் சொல்லப்படும் வகையில் ஒரு பாடலை எழுதியிருக்கேன். இப்பாடலை புரட்சியாகவும் எடுத்துக்கலாம் எழுச்சியாகவும் எடுத்துக்கலாம்; விடுதலைக் கருவியாகவும் எடுத்துக்கலாம். இப்படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்திருக்கின்றன" எனக் கூறியிருக்கிறார். 'தோரணம் ஆயிரம்' பாடலை பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமியும், 'புது வரலாறு' பாடலை தேசிய விருதுபெற்ற பாடகர் சுந்தரய்யரும் பாடியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!