வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (09/11/2017)

கடைசி தொடர்பு:08:26 (10/11/2017)

நான் என்பது நான் மட்டுமா?..நீ கூடத்தான்! - வேலைக்காரன் ’இறைவா’ பாடல் லிரிக் வீடியோ

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’படத்தின் இறைவா பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியானது.


வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் யூடியூப் தளத்தில் இந்த வீடியோவை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் 'இறைவா', 'கருத்தவனெலாம் கலீஜா' என்னும் இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. இறைவா பாடலின் லிரிக் வீடியோ இப்போது வெளியாகி இருக்கிறது. லிரிக் வீடியோவில் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் ஹீரோயின் நயன்தாராவை விட, பாடலைப் பாடியுள்ள அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோரே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.