Published:Updated:

ராகுல் காந்தியின் சித்தீதீதீ...

சமஸ், க.நாகப்பன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''குறும்புங்கிற வார்த்தையைக் கேட்டே எவ்வளவு நாள் ஆகுது?'' - ஆர்வத்துடன் விளையாட்டுக்கு வந்தார் ராமகோபாலன்.

 ''சிக்கிட்டேனா, போச்சுடா'' - பாயவும் முடியாமல் பதுங்கவும் முடியாமல் தவித்தார் சினேகன்.

''சரியோ, தப்போ... யோசிக்காமப் பதில் சொல்லிடுவேன். பரவாயில்லையா?''- பரபரப்பானார் ஸ்ரீவித்யா.

''எவ்ளோ நாள்தான் நானும் காமெடியனாவே நடிக்குறது?'' - இது பிரேம்ஜி அமரன்.

''ஸ்கூல்லயே பங்க் அடிச்சு ரவுண்டு வந்த என்கிட்ட கேள்வியா?''- தயக்கத்தோடு வசுந்தரா.

ராகுல் காந்தியின் சித்தீதீதீ...

ராகுல் காந்தியின் சித்தி யார்?

சரியான பதில்: மேனகா காந்தி

ராமகோபாலன்: ''ரொம்ப அவசியம்... இப்படியே போட்டுக்குங்க!''

சினேகன்: ''அம்மா பேரு, சித்தி பேரு எல்லாம் சொல்றது தப்பு. அது யாரோட அம்மா, சித்தியா இருந்தாலும் சரி. அதனால, மரியாதை நிமித்தமா சொல்ல விரும்பலைனு போட்டுக்குங்க!''

ஸ்ரீவித்யா: ''ராகுல் காந்தி சித்தி பெயரா... ம்... மேனகா காந்தீய்!''

பிரேம்ஜி அமரன்: ''ராகுல் காந்தி அம்மா சோனியா காந்தி. அப்பா ராஜீவ் காந்தி. பாட்டி இந்திரா காந்தி... ஆனா, சித்தி யார்னு தெரியலையே? காந்தினு பேர் முடியும்னு மட்டும் தெரியுது!''

வசுந்தரா: ''இது ஓவரா இருக்கு... ராகுல் காந்தி சித்திக்கும் எனக்கும் என்னங்க சம்பந்தம்?''

சங்க இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு ஏன் அந்தப் பெயர்?

சரியான பதில்: காலத்தால் முந்தைய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களுக்கு, பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று பெயர். அதற்குப் பின் வந்த திருக்குறள், நாலடியார், ஏலாதி போன்றவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வகைப்படுத்தப்பட்டன!

ராமகோபாலன்: ''ஹா... ஹா... கீழிருந்து பதினெட்டா, மேலிருந்து பதினெட்டா? அது ஓர் இலக்கிய நூல்!''

சினேகன்: ''அதுவும் ஒரு கணக்குதான். ஹ்ஹா... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கணக்கு இருக்குல்ல?''

ஸ்ரீவித்யா: ''சார், நான் ஸ்கூல்ல இங்கிலீஷ், இந்திக்கு அப்புறம் தேர்டு லாங்குவேஜ்தான் தமிழ் படிச்சேன். மன்னிச்சு விட்ருங்க சார்!''

பிரேம்ஜி அமரன்: ''என்னது... பதினஞ்சு தமிழா? சத்தியமாத் தெரியல... அர்த்தமே தெரியல!''

வசுந்தரா: ''அநியாயம்... தெரியாத கேள்வியாக் கேக்குறீங்க!''

ராகுல் காந்தியின் சித்தீதீதீ...

மங்காத்தா விளையாட்டில் எத்தனை சீட்டுகள் இருக்கும்?

சரியான பதில்: ஒரு கட்டுக்கு 52 சீட்டுகள்.

ராமகோபாலன்: ''மங்காத்தாவா... அப்டின்னா? ஓ... சீட்டாட்டமா, அதுல எனக்குப் பரிச்சயம் கிடையாது!''

சினேகன்: ''மங்காத்தாங்கிறது ஆடறவனைப் பொறுத்தது. மூணு சீட்டுல ஆடறவனும் இருக்கான், பத்துப் பதிமூணு சீட்டுல ஆடறவனும் இருக்கான்!''

ஸ்ரீவித்யா: ''ஐயையோ தெரியாது... விளையாடுனதே இல்லையே!''

பிரேம்ஜி அமரன்: ''ஒரு கட்டுல ஐம்பத்துஇரண்டு இருக்கும்னு நினைக்குறேன். ஜுஜூபி கொஸ்டீன்!''

வசுந்தரா: ''அது சினிமா டைட்டில்தானே... அப்படி ஒரு விளையாட்டு இருக்கா என்ன?''

சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் யார்?

சரியான பதில்: கே.பாலசந்தர்

ராமகோபாலன்: ''நம்ம பாலசந்தர்!''

சினேகன்: ''கே.பி. சார்!''

ஸ்ரீவித்யா: கே.பி. சார்... அவர் பாராட்டுல வளர்ந்த பொண்ணு சார் நான்... மறப்பேனா?

பிரேம்ஜி அமரன்: ''சத்தியமா அப்படி ஒரு விருது இருக்குன்னே தெரியாது. ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கின கிராமி, ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகள் மட்டும்தான் தெரியும்!''

வசுந்தரா: ''இயக்குநர் சிகரம் பாலசந்தர் சார்!''

ராகுல் காந்தியின் சித்தீதீதீ...

ஜெயலலிதா அறிவித்தபடி, அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு?

சரியான பதில்: 51.9 கோடி

ராமகோபாலன்: ''தெரியாது சார்.''

சினேகன்: ''ஐயையோ சாமீ, எனக்குத் தெரியாது. ஆளை விட்ருங்கப்பா!

ஸ்ரீவித்யா: ''ஆ... 51 கோடி.''

பிரேம்ஜி அமரன்: ''எனக்குத் தெரியாது ராசா... நோ அரசியல்! நீங்க ஒரு அப்பாவிகிட்ட வன்முறையைப் பிரயோகிக்கிறீங்க!''

வசுந்தரா: ''தெரியும்... ஆனா, சொல்ல மாட்டேன். நமக்கு ஏன் சார் வம்பு?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு