'யெஸ்.... எனக்கு கல்யாணம்!' நெகிழும் நமீதா

நடிகை நமிதாவுக்கு டும்டும்டும். நமீதாவுக்கும் அவரது நண்பர் வீரா என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பிக்பாஸ் ரைசா  ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். 

திருமணம் குறித்து நமீதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நானும் வீராவும் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவல் உண்மை தான். எங்கள் இருவருக்கும்  நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. இது காதலுக்குப் பின் உறவினர்களின் சம்மதத்தோடு நடைபெறும் திருமணம்.

நமிதா

எங்களின் இருவரின் நெருங்கிய நண்பரான ஸ்ரீதர் பாபு என்பவரால் எங்களிடையே நட்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த நட்பு நெருக்கமானது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒரு இரவு விருந்தில் வீரா என்னிடம் தனது காதலைச் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஏனெனில் நாங்கள் இருவரும் முன்னரே எங்கள் எதிர்கால லட்சியங்கள், பிடித்தவைகள் குறித்து பகிர்ந்திருந்தோம். அவருக்கு உடனே ஓ.கே. சொல்லி விட்டேன். எனக்கு முக்கியத்துவம் தருகிற ஒருவருடன் இருப்பது பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். கடந்த 3 மாதங்களாக வீராவை நான் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளேன். அவர் எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். அவருடைய ஆதரவு மற்றும் கனிவால் ஆண்களின் மீதான எனது நம்பிக்கை மீண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றி. எங்கள் இருவருக்கும் உங்கள் வாழ்த்துகளும் அன்பும் வேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று நமீதா கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!