வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (11/11/2017)

கடைசி தொடர்பு:08:50 (11/11/2017)

'இந்திரஜித்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது !

அடல்ட் காமெடி படமான 'ஹர ஹர மஹாதேவகி' படத்திற்கு பிறகு நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'இந்திரஜித்'.

இந்திரஜித்

இந்தப் படத்தை 'சக்கரகட்டி' படத்தை இயக்கிய கலாபிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத்திடம் உதவி இசையமைப்பாளராக இருந்த கிருஷ்ண பிரசாத் முதன்முதலாக இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக கணேஷ் பாபுவும், ஒளிப்பதிவாளராக பாடலாசிரியர் அறிவுமதிவின் மகன் ராசாமதியும் பணியாற்றி உள்ளனர். 'உதயம் NH4' படத்தில் நடித்த அஷ்ரிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தாணுவின் 'வி கிரியேசன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் நவம்பர் 24-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்த வருடம் வெளியாகும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

                                       

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க