வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (12/11/2017)

கடைசி தொடர்பு:10:01 (13/11/2017)

நடிகர் விக்ரம் தேடும் அந்த 'அவள்' யார்?

நடிகர் விக்ரம் தன் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ஹீரோயின் தேடி வருகிறார்.

விக்ரம், வர்மா


நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். தெலுங்கில் மெகா ஹிட் அடித்த 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு 'வர்மா' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில், நடிகர் விக்ரம் இப்போது இந்தப் படத்துக்கு ஹீரோயின் தேடிவருகிறார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவளைக் காணவில்லை. அந்த அவள் நீங்களாக இருப்பின், அவள் உங்களைப் போல இருப்பின் உங்கள் புகைப்படத்தையும், வீடியோவையும் varmathemovie@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களைச் சந்திப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், வேகமாக அனுப்பி வையுங்கள்” என்று கூறியுள்ளார்.
பதிவோடு சேர்ந்து வீடியோ ஒன்றையும் நடிகர் விக்ரம் இணைத்துள்ளார். அந்த வீடியோவுக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர்களுக்கு விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.