வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (12/11/2017)

கடைசி தொடர்பு:08:02 (13/11/2017)

'அண்ணாதுரை' பாடல்களை இலவசமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம்! விஜய் ஆண்டனி அறிவிப்பு

இரட்டை வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படம் வரும் 30-ம் தேதி ரிலீஸாகிறது.

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் விஜய் ஆண்டனி, எமன் படத்துக்குப் பிறகு நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கும், இந்தப் படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இரட்டை வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படம் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. படத்தின் பாடல்கள் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அண்ணாதுரை படத்தின் பாடல்களை, தனது இணையதளமான ’www.vijayantony.com’ -ல் மக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று விஜய் ஆண்டனி தற்போது அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாகப் பார்க்கப்படும் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் வரவேற்புக் கிடைத்துள்ளது.