ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருது!

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஆந்திர அரசின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


தெலுங்கு சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் என்.டி.ஆர் தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

என்.டி.ஆர் தேசிய விருதுப் பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டுக்கான விருது கமல்ஹாசனுக்கும் 2016-ம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்துக்கும் வழங்கப்படவிருக்கிறது. 2015-ம் ஆண்டுக்கான விருது இயக்குநர் கே.ராகவேந்திர ராவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2015-ம் ஆண்டில் சிறந்த படமாக பாகுபலி (முதல் பாகம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான விருது மகேஷ்பாபுவுக்கு வழங்கப்பட உள்ளது. 2014-ம் ஆண்டில் சிறந்த இயக்குநருக்கான பி.என்.ரெட்டி தேசிய விருதைப் பாகுபலி இயக்குநர்  ராஜமௌலி பெறுகிறார். 2015-ம் ஆண்டில் வெளியான 'சைஸ் ஜீரோ' படத்தில் நடித்த அனுஷ்காவுக்குச் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரில் வெளிவந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!