இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது; கமல்ஹாசன் ட்வீட் | Hindu terrorism imposes knife to children, Kamal hassan tweet

வெளியிடப்பட்ட நேரம்: 09:21 (15/11/2017)

கடைசி தொடர்பு:10:56 (15/11/2017)

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது; கமல்ஹாசன் ட்வீட்

'இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது. மனம் பதறுகிறது' என்று ஒருவர் பதிவிட்டதை கமல்ஹாசன் மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


சிறுவன் ஒருவன் கமலின் புகைப்படத்தைக் கத்தியால் குத்துவது போல ஒரு வீடியோ இணையத்தில் உலவியது. இதுதொடர்பாகப் பதிவிட்ட கமல், `என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன்முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதேப்போல, மற்றொரு நபர், 'இந்து தீவிரவாதம், குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் (கமல்ஹாசன்) கூறியதை சரியென்று நிறுவுகின்றனர்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதைப் 'புரியாதவர்க்குப் புரியும்படியாய்' என்று தலைப்பிட்டு கமல் பகிர்ந்துள்ளார். 
 


அதிகம் படித்தவை