`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார் | Actress Andrea sung a song in Baskar oru Rascal movie

வெளியிடப்பட்ட நேரம்: 23:47 (15/11/2017)

கடைசி தொடர்பு:07:57 (16/11/2017)

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்

'ப்ரெண்ட்ஸ்', 'காவலன்' படத்தின் இயக்குநர் சித்திக் தமிழில் இயக்கும் திரைப்படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'.  அரவிந்த்சாமி, அமலா பால் நடிக்கும் இந்தப் படத்தில் மீனாவின் குழந்தை நைனிகாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

பாஸ்கர் ஒரு ராஸ்கல்


'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற மலையாளப் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டும் இந்தப் படத்துக்கான வசனத்தை ரமேஷ் கண்ணா எழுதியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சிறிது நாள்களுக்கு முன்பு வெளியானது. 

இதற்கிடையில், இந்தப் படத்துக்காக ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். அம்ரீஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30-ம் தேதி வெளியிடுகிறது. மேலும், டிசம்பரில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க