வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (16/11/2017)

கடைசி தொடர்பு:16:00 (16/11/2017)

ஹேய்... சூப்பர் மேன் கெட்டப்ல விக்ரம்..!

இன்ஸ்டாகிராம் வலை தளத்தின் சமீபத்திய புதுவரவு, நம்ம சீயான் விக்ரம். இன்று, இவர் பதிவேற்றிய ஒரு போஸ்ட், வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது.

சீயான்

விக்ரம், தன்னுடைய புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் மகன் துருவ் விக்ரமின் ‘வர்மா’ திரைப்பட போஸ்டர்களைத் தொடர்ந்து பதிவேற்றிவந்தார். இந்நிலையில் இன்று, ‘சூப்பர்மேன்’ காஸ்ட்யூமில் சியானின் அசத்தல் போஸ்ட் ஒன்று வைரலாகிவருகிறது. அந்தப் புகைப்படம், ‘தெய்வத்திருமகள்’ திரைப்பட ஷூட்டிங்போது ஒரு சிறிய பகுதிக்காக எடுக்கப்பட்ட ஸ்டில். தற்போது, அந்தப் புகைப்படத்தை #throwbackthursday என்ற ஹேஷ் டேக் உடன் பதிவேற்றியுள்ளார் விக்ரம்.

மேலும் அந்தப் பதிவில், “நடிப்பதன்மூலம் கிடைக்காது. ஆசைப்படுவதன்மூலம் கிடைக்காது. நம்புவதன்மூலம் கிடைக்காது. எளிமையாகக் கிடைக்காது. கடுமையான உழைப்பு...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை முழுவதும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும். அப்படி இல்லையென்றால், இதுபோன்றதொரு நல்ல காஷ்ட்யூம் டிசைனர் உங்களுக்குக் கிடைத்தால் முடியும்” எனப் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.