வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (17/11/2017)

கடைசி தொடர்பு:12:39 (17/11/2017)

’சாய்ராட்’ இந்தி ரீமேக்கில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜானவி!

80களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த ஹீரோயின் நடிகை ஶ்ரீதேவி. கமல் மற்றும் ரஜினியுடன் அதிகப் படங்களில்  நடித்த இவர், பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.  தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற முதல் ஹீரோயின் இவர்தான் என்று கூறப்படுகிறது. 

ஶ்ரீதேவி மகள் ஜானவி

அதன்பிறகு, தமிழில் நீண்ட காலமாக தலைகாட்டாமல் இருந்தார். பிறகு,  இந்தி உலகைச் சேர்ந்த போனி கபூரை திருமணம் செய்துகொண்டு, மும்பையிலேயே செட்டில் ஆனார். 

இரண்டு பெண்களுக்குத் தாயான ஶ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் 'புலி' படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அவ்வப்போது குடும்பத்துடன் ஶ்ரீதேவி வெளியே செல்லும்போது, மகள்களுடன் இவர் எடுக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகும். 'ஶ்ரீதேவியின் மூத்த மகள், விரைவில் நடிக்க வருகிறார்' என்று நெட்டிசன்ஸ் கிசுகிசுத்து வந்தனர்.  ஶ்ரீதேவி, அதைத் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் தற்போது, ஶ்ரீதேவியின் மகள் ஜானவி இந்தியில் நடிக்கப்போகும் 'தடாக்' படத்தின் போஸ்டர் வெளியாகி, நெட்டிசன்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளது. படத்தின் ஹீரோவாக ஷாகித் கபூரின் உறவினர் இஷான் காதர் நடிக்க இருக்கிறார். மராத்தியில் ரிலீஸாகி ஹிட் அடித்த 'சாய்ராட்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் ஜூலை மாதம் 6ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க