பிக்பாஸ் புகழ் ரைசா - ஹரீஷ் கல்யாண் இணைந்து நடிக்கும் ’பியார், பிரேமா, காதல்’!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே ஹரீஷ் கல்யாண் 'சிந்து சமவெளி', ' பொறியாளன்', 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்தது.  

பிக் பாஸ்

அதேபோல் 'வேலையில்லா பட்டத்தாரி -2' படத்தில் கஜோலுக்கு உதவியாளராகக் கேரக்டர் ரோலில் ரைசா நடித்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாகதான் ரைசாவும் கவனம் பெற்றார். குறிப்பாக பிக்பாஸில் ரைசா பேசிய 'அட போங்கய்யா, ட்ரூ' உள்ளிட்ட வார்த்தைகள் மீம்ஸ்களின் வைரல் கண்டென்டானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஒன்றாகத் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இளன் எனும் புதுமுக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் அந்தப் படத்துக்கு 'பியார் பிரேமா காதல்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தயாரிப்பது யுவன் ஷங்கர் ராஜா என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!