வெளியிடப்பட்ட நேரம்: 02:56 (18/11/2017)

கடைசி தொடர்பு:02:58 (18/11/2017)

`மெர்சல்' வீடியோ சாங்ஸ் வெளியானது!

நடிகர் விஜய் நடித்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் டிரைலர் வெளியானபோதே பரவலராக அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் வெளியாவதற்கு முன்பாகவே டைட்டில் பிரச்னை என சில சிக்கல் வந்தன. ரிலீஸிற்குப் பிறகு படத்தில் ஜி.எஸ்.டி குறித்தான காட்சிகளை நீக்க வேண்டும் என பி.ஜே.பி யின் ஹெச் ராஜா தெரிவித்தார்.  விஜய் குறித்த அவர் பேசிய விஷயங்களுக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பின. இவற்றையெல்லாம் கடந்து படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது 'மெர்சல்' மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

மெர்சல்

இந்நிலையில் மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களுக்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சோனி மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மெர்சல் விஷுவல் ட்ரிட்' என ட்வீட்டியபோதே ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகினர். பின் இன்று ஒவ்வொரு பாடலாக ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.