வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்! | Oru Pakka Kadhai Movie Trailer Realesed

வெளியிடப்பட்ட நேரம்: 03:19 (18/11/2017)

கடைசி தொடர்பு:03:19 (18/11/2017)

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!

'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் பாலாஜி தரணீதரன். விஜய் சேதுபதி நடித்த இப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் பாலாஜி தரணீதரன் தற்போது அவரது இரண்டாவது படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார். `ஒரு பக்க கதை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் `மீன் குழம்பும் மண்பானையும்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

 

 

ஒரு பக்கக் கதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் மீன் குழம்பும் மண்பானையும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர். 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகி மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் ஒளிபதிவாளர் ப்ரேம்குமார் இந்தப் படத்தற்கு ஒளிபதிவு செய்துள்ளார். வாசன் விஷீவல் டவென்டர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.ஶ்ரீனிவாசன் இப்படத்தினை தயாரித்துள்ளார். தன் முதல் படத்தில் வித்தியாசமானதொரு கதையோடு கொடுத்திருந்தார் பாலாஜி தரணீதரன். இந்தப் படமும் வித்தியாசமானதொரு ஜானரில் இருக்கும் என்பது ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது.