தீபிகா படுகோன் பாதுகாக்கப்பட வேண்டும்..! 'பத்மாவதி'க்கு ஆதரவாக கமல்ஹாசன் குரல் | Kamal hassan tweets about Deepika Padukone issue

வெளியிடப்பட்ட நேரம்: 23:47 (20/11/2017)

கடைசி தொடர்பு:11:07 (21/11/2017)

தீபிகா படுகோன் பாதுகாக்கப்பட வேண்டும்..! 'பத்மாவதி'க்கு ஆதரவாக கமல்ஹாசன் குரல்

'தீபிகா படுகோன் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' படத்துக்கு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ராஜபுத்திர சமூகத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, தீபிகா படுகோனுக்கு எதிராக பொதுத் தளத்திலேயே கடுமையான மிரட்டல் வருகின்றன. 'தீபிகா படுகோனின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும்' என்று பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 'தீபிகா படுகோன் பாதுகாக்கப்பட வேண்டும். அவரது சுதந்திரம் மிகவும் முக்கியமானது, மதிப்புமிக்கது. அதை அவருக்கு மறுக்காதீர்கள். பல சமூகங்கள் என்னுடைய படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எல்லா வகையிலான தீவிரவாதமும் வருந்தத்தக்கதுதான். இந்தியாவே எழுந்திரு. இந்த விவகாரம்குறித்து போதுமான அளவு பேசிவிட்டோம். இது சிந்திப்பதற்கான நேரம்' என்று பதிவிட்டுள்ளார்.