அரவிந்த் சாமி, ஸ்ரேயாவின் நடிப்பில் `நரகாசுரன்' டீசர்! | Naragasuran teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (25/11/2017)

கடைசி தொடர்பு:19:30 (25/11/2017)

அரவிந்த் சாமி, ஸ்ரேயாவின் நடிப்பில் `நரகாசுரன்' டீசர்!

நரகாசுரன் போஸ்டர்

துருவங்கள் பதினாறு' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'நரகாசூரன்'. இதில் அரவிந்த் சாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண் என மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர். ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு நிறுவனத்துடன், கார்த்திக் நரேன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்குப் பிடித்திருந்த போதிலும் அவரால் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியமால்போனது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.