வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (26/11/2017)

கடைசி தொடர்பு:10:58 (26/11/2017)

திருட்டுப் பயலே 2-ம் பாகத்தின்  புது ட்ரெய்லர்! - எகிறும் எதிர்பார்ப்பு

prasanna

பாபி சிம்ஹா, அமலாபால் நடித்துள்ள திருட்டுப் பயலே 2-ம் பாகத்தின்  புது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் இயக்குநர். 

 


 

 

சுசிகணேசன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடிப்பில் வெளிவந்த திருட்டுப் பயலே படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது 11 ஆண்டுகள் கழித்து திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசிகணேசன் இயக்கியுள்ளார். இதில், பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. காவல்துறை அதிகாரி, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல் வெளியான ட்ரெய்லரை விடவும் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ட்ரெய்லர் எதிர்பார்ப்பை  கூட்டியுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க