வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (30/11/2017)

கடைசி தொடர்பு:20:01 (30/11/2017)

சூர்யா நடிப்பில் திரைக்கு வரவுள்ள `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர்!

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்’. `நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள். சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. அந்தப் படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.