வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (01/12/2017)

கடைசி தொடர்பு:19:23 (01/12/2017)

`என் தங்கச்சிக்கு ஒண்ணுன்னா..!’ சசிகுமாரின் கொடிவீரன் ட்ரெய்லர்

சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள ‘கொடிவீரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

கொடிவீரன் போஸ்டர்

`மருது' படத்துக்குப் பிறகு, இயக்குநர் முத்தையா சசிகுமாரை வைத்து 'கொடிவீரன்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த இருவரின் கூட்டணியில், ஏற்கெனவே 'குட்டிப் புலி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொடிவீரன் திரைப்படத்தை சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமே தயாரித்து வழங்குகிறது.

 

 

 

 

'கொடிவீரன்' படத்தில் சசிகுமாரோடு பசுபதி, மஹிமா, சனுஷா, விதார்த், பூர்ணா, பாலசரவணன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இந்தப் படத்தின் வில்லனாக, 'குற்றம் 23' மற்றும் 'தடம்' படத்தின் தயாரிப்பாளரான இந்திரகுமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் S.R.கதிர் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ரகுநந்தன் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. டிசம்பர் 7-ம் தேதி திரைக்கு வருகிறது `கொடிவீரன்'