ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி..! தலைவர்கள் கருத்து

விஷால் அரசியலில் இறங்கினால் அவருடைய சினிமா வாழ்வும் அஸ்தமனமாகிவிடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள்.


திருமாவளவன் : விஷாலும் அரசியலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பாகவே இதனைப் பார்க்கிறேன். விஷாலும் தீவிர அரசியில் ஈடுபட முடிவு எடுத்துவிட்டார்.

 வானதி சீனிவாசன் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விஷாலுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். தமிழக அரசியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியப் பங்குவகிக்கும். 

தமிழருவி மணியன் : மாற்று அரசியலை வளர்த்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கோடம்பாக்கத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறும் அளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. விஷால் எல்லாம் ரஜினி ஆகிவிட முடியுமா? என்று தெரிவித்துள்ளார். 

நாஞ்சில் சம்பத் : எங்களுக்கும் தி.மு.கவுக்கும் மட்டுமே போட்டி. விஷாலை நாங்கள் போட்டியாகக் கருதவில்லை. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை விஷால் பிரிக்க வாய்ப்புள்ளது. தினகரன் அரசியலுக்கு வரவேண்டும் என்று தினகரன் முன்னரே அழைப்புவிடுத்திருந்தார். 

ராஜேந்திர பாலாஜி : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியில் விஷால் டெபாசிட் இழப்பார். அவர், அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, திரைப்பட வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிடும். எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியாது. 

அமீர் : யாரை வீழ்த்துவதற்காக விஷால் களிமறங்கியிருக்கிறார் என்பது தெரியவில்லை. விஷால் நோக்கம் பற்றி தெரியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. 

சுந்தர்.சி : விஷால் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அரசியலில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியம் உள்ளது. வருவேன், வருவேன் என்று கூறாமல் அரசியலுக்கு வந்தது, சிறப்பான ஒன்று. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!