வெளியிடப்பட்ட நேரம்: 23:38 (02/12/2017)

கடைசி தொடர்பு:23:39 (02/12/2017)

'2.0' ரிலீஸ் தள்ளிப்போகிறது!

2.0

இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் '2.0'. காரணம், பெரும் பொருள் செலவில் இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அக்ஷய் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்குகிறார். நாயகியாக ஏமி ஜாக்ஸன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், 2.0 திரைப்படம் 2018-ம் ஆண்டு ஏப்ரலில் உலகம் முழுவதும் வெளியாகும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.