சமூக வலைதளங்களில் வைரலாகும் அஜித்தின் புதிய கெட்டப்!

நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த `விவேகம்' படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கே அஜித் வழங்கினார். அந்தப் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக வந்தநிலையில், படத்துக்கு `விசுவாசம்' என்று பெயரிடப்பட்டது. இருப்பினும், படத்தில் அஜித்தின் கெட்டப் குறித்து எந்த விவரமும் இதுவரையில் தெரியாமல் இருந்துவருகிறது.

இந்தநிலையில், சமூக வலைதளங்களில் நேற்றிலிருந்து அஜித்தின் புதிய படம் ஒன்று வைரலாகிவருகிறது. அதில், அஜித் பழக் கூடையுடன் நடந்து செல்கிறார். அதில், அவருடைய தலைமுடி சால்ட் அண்ட் பெப்பர் கலரில் அல்லாமல், கோல்டன் கலரில் உள்ளது. மேலும் உடல் எடையும் சற்றும் அதிகரித்து இருப்பதுபோல தெரிகிறது. இது விசுவாசம் படத்துக்கான புதிய கெட்டபா என்று நெட்டீசன்கள் யோசித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!