``மக்களில் ஒருவனாகத் தேர்தலைச் சந்திக்கிறேன்!'' - விஷால் உற்சாகம் | I contest election by one of the people, says Vishal

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (04/12/2017)

கடைசி தொடர்பு:17:59 (04/12/2017)

``மக்களில் ஒருவனாகத் தேர்தலைச் சந்திக்கிறேன்!'' - விஷால் உற்சாகம்

மக்களில் ஒருவனாக, ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் பிரச்னைகளை முன்னிருத்தி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார். 


காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி சிலைகளுக்கு இன்று காலையில் விஷால் மாலை அணிவித்தார். அதன்பிறகு, மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் இருசக்கர வாகனத்தில் தண்டையார்பேட்டைக்கு வந்தார். பிறகு, நீண்ட நேரம் காத்திருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், `ஆர்.கே.நகரில் எல்லாம் சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளே ஆர்.கே.நகரின் முக்கியத் தேவையாகும். குஷ்பு, டி.ஆர்.பாலுவின் மகன், அர்விந்த் கெஜ்ரிவால் ஆகிய மாற்றுக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்திருப்பது நல்ல ஆரோக்கியமான சூழல். கட்சியில் இணைந்தோ அல்லது புதிய கட்சித் தொடங்கிதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நான், மக்களில் ஒருவனாகத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி போட்டியிடுகிறேன்'' என்று தெரிவித்தார். 


[X] Close

[X] Close