'' 'பிரமாதமான நடிப்பு. ஆனால், வரவேற்பைப் பார்த்துட்டு திமிர் வந்துடக் கூடாது. அப்படி வந்தா நமக்கு எல்லாம் தெரியும்கிற நெனைப்பிலேயே தேங்கிடுவோம். நிறையக் கத்துக்கணும்னு நெனைச்சாத்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்!’ - நாடகத்தைப் பாத்துட்டு என் குரு 'கூத்துப்பட்டறை’ முத்துசாமி சார் சொன்ன வார்த்தைகள். இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்?'' - திருப்தியோடு பேசுகிறார் தேவி. கூத்துப்பட்டறையில் நடிப்பு பயின்று, தற்போது அங்கேயே பயிற்சியாளராக இருப்பவர், 'தி விருக்ஷா’ என்ற மேடை நாடகப் பயிற்சிக் குழுவையும் தொடங்கி உள்ளார்.

''கூத்துப்பட்டறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த அனுபவத்தில் தொடங்கியதுதான் 'தி விருக்ஷா’. வெறுமனே பயிற்சியோடு அவர்களை அனுப்பிவிடாமல், ஒவ்வொரு பேட்ச் முடிந்ததும் ஒரு கதையை நாடகமாக்கி அரங்கேற்று கிறோம். சமீபத்தில் நாங்கள் மேடையேற்றிய 'கீசக வதம்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவின் ராம்குமார், யோகேஷ், பாலாவுக்கு 'போராளி’ படத்தில் நடிக்க இயக்குநர் சமுத்திரகனி வாய்ப்பு அளித்துள்ளார்!'' என்கிறார் தேவி.

''சினிமாவுக்குச் செல்லப் பயிற்சி அளிப்பதுதான் நோக்கமா?''

''சினிமாவின் மூலம் எங்கள் திறமை பொதுமக்களிடம் சென்று அடைவதால்தான் எங்களின் நகர்வு சினிமாவை நோக்கி இருக்கிறது. முதல் பேட்ச் முடிவில், 'விக்ரமாதித்யன் கதை’, இரண்டாவது பேட்ச்சில் 'கீசக வதம்’ என முத்துசாமி சாரின் ஸ்க்ரிப்ட்டை நாடகம் ஆக்கினோம். அப்போது இயக்குநர்கள் சற்குணம், மீரா கதிரவன், சமுத்திரகனி, சசி, சேரன், கரு.பழனியப்பன், வேலு பிரபாகரன் எனப் பலரை அழைத்தோம். சமுத்திரகனியும் கரு.பழனியப்பனும் எங்கள் டீமுக்கு ட்ரீட் தந்து பாராட்டினார்கள். 'அடுத்த நாடகத்துக்கு வர்றேன்’னு ஷங்கர் சொல்லிஇருக்கார். 'நண்பன்’ படத்தில் ஜீவாவின் அக்காவாக என்னை நடிக்க வைத்து உள்ளார்!''

''நீங்கள் நாடகத்துக்கு வந்தது எப்படி?''

''வேலூர் குடியாத்தம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமம்தான் என் ஊர். அப்பா டீச்சர். வீட்டில் நான்கு பெண்கள். சண்டை போட்டுத்தான் கூத்துப்பட்டறையில் வந்து சேர்ந்தேன். முதலில் கோபம் இருந்தாலும், ஒரு வருடம் கழித்து கூத்துப்பட்டறைக்கு வந்து பார்த்த பிறகே, 'பரவாயில்லை. நம்ம பொண்ணு நல்ல இடத்தில்தான் இருக்கா’னு அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. இப்போது மேடைக் கூச்சம் களைவது, வசன உச்சரிப்பு, தற்காப்புக் கலை, வசனத்தை இயல்பாகப் பேசுவது எனப் பல விஷயங்களைக் கற்றுத்தருகிறோம்!''

''உங்கள் எதிர்கால நோக்கம்?''

''இதை சேவை என்றெல்லாம் சொல்ல முடியாது. முத்துசாமி சார் போன்ற ஜாம்ப வான்களிடம் சில விஷயங்களைக் கற்றுஇருக்கிறோம். கற்ற விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்து, நல்ல நடிகர்களை உருவாக்குகிறோம். 'இவர் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்’ என்று அடையாளம் இருப்பதுபோல் ' 'தி விருக்ஷா’வில் இருந்து வந்தவர்’ என யாராவது அடையாளம் காணப்பட்டால் சந்தோஷப்படுவேன். இதையும் தாண்டி, பயிற்சிக்காக நிலையான ஓர் இடம் பிடிக்க வேண்டும். இப்போதைக்கு எங்கள் பயிற்சிக்கு இடம் தந்து உதவும் லதா ராஜேந்திரன் மேடத்துக்கு நன்றி!''