Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'திருந்துங்கள் சேரன்....!'- எச்சரிக்கும் விஷால்

Chennai: 

'சேரனின் செயல்கள் தொடர்ந்தால், அவர்மீது சங்க விதிகளின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விஷால் தெரிவித்துள்ளார். 


தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலகவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார் சேரன். இந்த நிலையில், சேரனுக்கு விஷால் எழுதியுள்ள கடிதத்தில், 'இயக்குநர் சேரன் அவர்கள்மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர்மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. என்மீது தவறு இருந்து, அதைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன். ஆனால், சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற சட்டவிதி இல்லை.

இது எனது தனிப்பட்ட விருப்பம். சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் நிற்பதாலேயே, அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது. எப்போதுமே உரிமைகள் என்பது கெஞ்சிக் கேட்டுப் பெறவேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பிப் பெறவேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படிதான் செயல்படுகிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதும் மக்களின் சார்பில் அவர்களுக்காகக் குரல் எழுப்பத்தான்.

என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து, கீழ்த்தரமான விமர்சனங்களைவைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு, ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாறவேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால், சங்க விதிகளின்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement