`கோமாளிக் கூடாரம்..!' யாரைச் சொல்கிறார் ராதிகா சரத்குமார்

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை, ஜோக்கர்களின் கூடாரம் என்று ட்விட்டரில் நடிகை ராதிகா விமர்சித்துள்ளார். 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷால் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். முன்மொழிந்தவர்களின் கையெழுத்துப் போலியாக உள்ளது என்று கூறி விஷாலின் வேட்புமனுவை இன்று தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இந்தநிலையில், விஷாலை விமர்சிக்கும் வகையில் நடிகை ராதிகா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், `ஜோக்கர்களின் கூடாரம். மக்களுக்காக வேலை செய்யப்போகிறேன், ஊழலுக்கு எதிராகப் போராடப்போகிறேன் என்று கூறியவர், போலியான கையெழுத்தைப் பெற்றுள்ளார்.

மக்கள் தற்போது உண்மையான பச்சோந்தியைப் பார்க்கலாம். ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன் சொல்வதற்கு முன்னால் ஊழலை ஒழிக்கப் போகிறேன், மக்களைக் காப்பாற்றப்போகிறேன் என்று சிலர் நடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இறுதியில் அவர்கள், போலிக் கையெழுத்துகளால் நிராகரிக்கப்படுகிறார்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!