வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (10/12/2017)

கடைசி தொடர்பு:14:39 (10/12/2017)

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி

கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

விஷால்

நடிகர் விஷால் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. எனவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று சேரன் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.  பொதுக்குழு தொடங்கி சிறிது நேரத்திலேயே மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இதுவரை விஷால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

சேரன்