வெளியிடப்பட்ட நேரம்: 00:22 (12/12/2017)

கடைசி தொடர்பு:00:22 (12/12/2017)

கரி பூசிய முகத்துடன் ரஜினி..! காலா படத்தின் இரண்டாவது போஸ்டர்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 


இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இந்தக் கூட்டணியில் இரண்டாவது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு நிலவியது. அதீத, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தின் பெயரும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் மே மாதத்தில் வெளியானது.

அவ்வப்போது, படத்தின் சூட்டிங் போட்டோக்களும் வெளியாகிவந்தது. இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் கருப்பு உடையுடன், கரி பூசிய முகத்தில் ரஜினி மிரட்டலாக பார்க்கிறார். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.