சீனு ராமசாமியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!


 பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம், 'நிமிர்'. மலையாளப் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. மலையாளத்தில் பகத் பாசில் நடித்த கேரக்டரில், தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதால், இந்தப் படம் பற்றிய டாக் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. 

உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில், அடுத்த படம் இயக்குநர் சீனு ராமசாமியுடன் என்று ட்விட் தட்டியுள்ளார். மேலும், படத்தின் ஷூட்டிங் ஜனவரி 19 -ம் தேதி ஆரம்பமாகும் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், 

'தர்மதுரை' படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு, இந்தத் தகவல் அதிர்ச்சியாகவே உள்ளது. மேலும்,  சில நாள்களுக்கு முன், சீனு ராமசாமியின் அடுத்த படம், 'ஒரு ஜீவன் அழைத்தது' என்றும் அதில் அதர்வா நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!