வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (20/12/2017)

கடைசி தொடர்பு:13:21 (20/12/2017)

அனுஷ்கா நடித்திருக்கும் ’பாகமதி’ படத்தின் டீசர்..!

பாகமதி

'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக நடித்து எல்லோர் மனதையும் கொள்ளை அடித்தவர், அனுஷ்கா. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தப் படம்  திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் அனுஷ்காவின் நடிப்பைப் பார்த்து பலரும் பாராட்டித் தள்ளினர். இந்நிலையில், அனுஷ்காவின் 'பாகமதி' படத்தையும் வெகுவாக எதிர்பார்த்துவருகின்றனர் அனுஷ்காவின் ரசிகர்கள். 

 

 

இயக்குநர் அசோக் எடுக்கும் இந்தப் படத்தில், உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்தை வம்சி, பிரமோத் தயாரிக்கிறார்கள். 2018, ஜனவரியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க