வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (22/12/2017)

கடைசி தொடர்பு:21:49 (22/12/2017)

ரசிகர்களைச் சந்திக்கும்போது அரசியல் வருகை குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பார்..! தமிழருவி மணியன் உறுதி

ரசிகர்களைச் சந்திக்கும் டிசம்பர் 26 முதல் 31 ம் தேதிக்குள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் அவர் பிறந்தநாள் அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாறாக, டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தன் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இந்தநிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த்தைக் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பேசிய அவர், 'ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்கவுள்ள டிசம்பர் 26 முதல் 31-ம் தேதிக்கு இடைப்பட்ட ஒரு நாளில் அவருடைய செயல்திட்டம் குறித்து அறிவிப்பார். அதன்பிறகு, அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து எந்தச் சந்தேகமும் வராது' என்று தெரிவித்தார்.