அதிரடி ஆக்‌ஷனில் விமல், மாரி கெட்டப்பில் ரோபோ ஷங்கர்; மிரட்டும் ’மன்னர் வகையறா’ டீசர்!

’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’, ’பட்டத்து யானை’ போன்ற படங்களை இயக்கிய பூபதிபாண்டியனின் அடுத்த படம் 'மன்னர் வகையறா’. நடிகர் விமல், ரோபோ ஷங்கர், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.   

குடும்பப் படங்களில் நடித்து வந்த விமல் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் களத்தில் குதித்துள்ளார். காமெடி, ஆக்‌ஷன் எனக் கலந்து உருவாகிவரும் இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். ரோபோ ஷங்கர் மாரி தனுஷ் கெட்டப்பில் வந்து காமெடி அதகளம் செய்கிறார். 

நடிகர் விமல் தயாரிப்பில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!